search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் தடை எதிர்த்து"

    பிளாஸ்டிக் தடை சட்டத்தை எதிர்த்து சேப்பாக்கத்தில் நாளை விக்கிரமராஜா தலைமையில் வியாபாரிகள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை சட்டம் வருகிற 1-ந் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது.

    இதன்படி 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. கடைக்காரர்கள் பொதுமக்களுக்கு இதை வழங்கினால் கடை உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் காகித அட்டைகளை பயன்படுத்த வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    அரசின் இந்த அறிவிப்புக்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மறுசுழற்சி பயன்பாடு கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறுகையில் வியாபாரிகளை அழைத்து அரசு பேச வேண்டும். பிளாஸ்டிக்கில் எத்தனையோ வகைகள் உள்ளன. இதில் எந்தெந்த பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தலாம், எதை உபயோகப்படுத்த கூடாது என்பதை முதலில் அரசு தெளிவுபடுத்த வேண்டும். அதன் பிறகு நடைமுறை படுத்த வேண்டும்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் நாளை காலையில் எனது தலைமையில் வியாபாரிகள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சதக்கத்துல்லா, சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம், மாவட்டத் தலைவர்கள் என்.டி.மோகன், எஸ்.சாமுவேல், ஆதிகுரு சாமி, ரவி, அம்பத்தூர் ஹாஜி முகம்மது, ஆர்.எம்.பழனியப்பன், சுப்பிரமணியன், கே.ஏ.மாரியப்பன் உள்பட ஏராளமான பேர் பங்கேற்கிறார்கள். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களும் திராளாக பங்கேற்கிறார்கள்.

    ×